விகேபுரம் அருகே கள்ள ஓட்டு போட்டவர் கைது
விகேபுரம்: விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தில் கள்ள ஓட்டு போட்டவர் கைது செய்யப்பட்டார்.
விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அடையகருங்குளம் குழந்தைகள் நல மையத்தில் 36ம் நம்பர் பூத் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 5 மணி்க்கு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் வாக்களிக்க வந்தார். அவரது ஆவணங்களை சோதித்த அதிகாரிகள் அவரது கையில் மை வைத்து வாக்களிக்க அனுமதித்தனர். அவரும் வாக்களித்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த சிவகாமிநாதன் பூத்தை பார்வையிட வந்தார். அவர் பரமசிவனை பார்த்து சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின்னாக பேசியதால் அவரது ஆவணங்கள் அதிகாரிகள் துணையுடன் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பரமசிவனுக்கு பதில் வாக்களித்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர் சுப்புலெட்சுமி விகேபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அம்பை டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விகேபுரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பரமசிவனை கைது செய்தார்.
வாக்காளர்ளுக்கு டோக்கன்
விகேபுரம் நகராட்சியில் ஒரு பூத்தில் கூட்டம் அலைமோதியதால் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
விகேபுரம் நகராட்சியின் 10,11வது வார்டு மக்களுக்காக அப்பகுதியில் உள்ள டானா தேசிய துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம்
அலைமோதியதால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு 5 மணிக்கு பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. விகேபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில்
வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லை மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக, திமுக, மதிமுக என அனைத்து கட்சிகளும் ஓட்டு போட வாக்காளர்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்ததால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டு வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தனர். மூன்றடைப்பு பொன்னாக்குடி பகுதிகளில் நேற்று மாலை 3
மணி முதல் மழை கொட்டிய போதிலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிக்க வந்தனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாநகராட்சியையொட்டியுள்ள பேட்டை, டவுன் பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. தச்சநல்லூரில் போலீசார்
கடைகளை அடைக்க கடும் கெடுபிடி செய்தனர். இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்துவி்ட்டு வீட்டுக்கு சென்றனர்.
மாநகராட்சி 12வது வார்டு திம்மராஜபுரத்தில் பூத் எண் 49ல் ஏவியில் தேர்தல் கமிஷன் சார்பில் ஒரு வீடியோ கிராபர் வாக்குப்பதிவை வீடியோ எடுத்தார். அவரிடம்
அங்கீகார கடிதம் இல்லை என கூறி அதிமுகவினர் கடும் ஆட்பேசம் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். விகேபுரம்
நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு கரையார் பகுதி மக்களுக்கு இம்முறை வாக்குச்சாவடி சேர்வலாறில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 12 கிமீ
தூரம் செல்ல வசதி இல்லாததால் பலர் ஓட்டு போட செல்லவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications