தென் ஆப்பிரிக்க பெண்களை பலாத்காரம் செய்து கொள்ளையடித்தவருக்கு 50 ஆண்டு சிறை
ஜோகனஸ்பர்க்: 'பேஸ்புக்' தகவல் பரிமாற்றம் மூலம் பல இளம்பெண்களை ஏமாற்றிக் கற்பழித்த வாலிபருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகனஸ்பர்க் நகரை சேர்ந்தவர் தாபோ பெஸ்டர்(22). இவர் பேஸ்புக்கில் மாடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். தனது பெயர் தாமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மாடலிங் வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலையில் விழுந்தனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், 2 பணக்கார பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்து கொண்டார்.
இப்படியாக குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த தாபோ போலீஸில் சிக்கினார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது கதறி அழுத தாபோ, தனக்கு பெற்றோர் யார் என தெரியாது எனவும், தன்னை வளர்த்த ஒரு குடிகார பாட்டியினால் பலமுறை செக்ஸ் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.
அவரது வாதங்களை கேட்ட நீதிபதி பெண்களை கற்பழித்து, அவர்களிடம் கொள்ளையடித்து உள்ள பெஸ்டன், சமுதாயத்திற்கு ஒரு ஆபத்தான நபர். தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுத்தோறும் 56,000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்படுவது தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் உண்மையில் அதைவிட 9 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே பெஸ்டன் போன்றவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி பெஸ்டனின் குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications