நாளை 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு- ஏற்பாடுகள் தயார்
சென்னை: 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 19,646 பேர் போட்டியின்றி தேர்வானது போக மீதமுள்ள 1,12,759 பதவிகளுக்கு நேற்று முதல் கட்டத் தேர்தல் நடந்தது. இதில் இதில் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 பஞ்சாயத்து யூனியன்கள் அடக்கம்.
இதையடுத்து நாளை 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான பிராசரம் நேற்றுடன் முடிவடைந்தது.
நாளை நடைபெறும் 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 31 லட்சம் பேர் வாக்களிக்கவிருக்கின்றனர். பதற்றமானவை என்று கண்டறியபப்ட்டுள்ள வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் நேற்று மாலை மாலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும், பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குச்சீட்டுகளும், பெட்டிகளும் அனுப்பப்படுகின்றன.
நெல்லையில் 1711 வாக்குச் சாவடிகள்
நெல்லை மாவட்டத்தில் 1,711 வாக்குச்சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. 9.77 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில் நகராட்சிகள், 18 டவுன் பஞ்சாயத்துகள், 10 பஞ்சாயத்து யூனியன்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நாளை நடக்கிறது.
இதில் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,193 வாக்குச்சாவடிகளில் 5,21,132 பேரும், நகராட்சியில் உள்ள 230 வாக்குச்சாவடிகளில் 2,01,724 பேரும், டவுன் பஞ்சாயத்துகளில் அமைக்கப்பட்டுள்ள 288 வாக்குச்சாவடிகளில் 1,84,849 பேருமாக மொத்தம் 1,711 வாக்குச்சாவடிகளில் 9,77,005 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் பஞ்சாயத்து வார்டில் 14 பதவிகளுக்கு 80 பேரும், பஞ்சாயத்து யூனியன்களில் 145 பதவிகளுக்கு 826 பேரும், கிராம பஞ்சாயத்துகளில் 220 பதவிகளுக்கு 1,034 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டுகளில் 1546 பதவிகளுக்கு 4729 பேரும், 5 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு 41 பேரும், 149 கவுன்சிலர் பதவிகளுக்கு 852 பேரும், 18 டவுன் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்கு 124 பேரும், 264 கவுன்சிலர் பதவிக்கு 1,135 பேரும் போட்டியிடுகின்றனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் உள்ளாட்சிகளுக்கு 420 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications