பெங்களூர் செல்வதைத் தள்ளி வைக்க ஜெ. கோரிக்கை-புதன்கிழமை சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெங்களூர் தனி கோர்ட்டில் பல காலமாக நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் முறையாக ஜெயலலிதா வருகிற 20ம் தேதி நேரில் ஆஜராகவுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே நேரில் வர சம்மதித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனி நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றி நேற்றுதான் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். 20ம் தேதியன்று பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதி்மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று கோர்ட் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திடீரென ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புது மனு ஒன்று தாக்கல் செய்யபப்பட்டது. அதில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. எனவே தன்னால் அங்கு போக முடியாத நிலை உள்ளது. எனவே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
ஆனால் இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக புதன்கிழமைக்குள், ஜெயலலிதாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் ஜெயலலிதா பெங்களூர் போக வேண்டுமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications