திண்டுக்கல் அருகே தேவர் சிலைக்கு அவமரியாதை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எலுவனம்பட்டி என்ற கிராமத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் இன மக்கள் தயாராகி வருகின்றனர். தேவர் சிலைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் எலுவனம்பட்டி என்ற கிராமத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தேவர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சிலை அவமதிப்பு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலையை அவமதித்த விஷமிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications