காலையில் பார்த்த தேர்தல் சின்னம் மாலையில் மறைந்த மாயம்- மக்கள் மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காலையில் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருந்த ஒரு சின்னம், மாலையில் காணாமல் போனதால் மக்கள் சாலை மறியலில் குதித்தனர்.
ஜி.அரியூர், 17-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் செந்தாமரை, திமுக சார்பில் கல்யாணி, தேமுதிக சார்பில் பச்சையம்மாள், சுயேச்சையாக முருகவேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வார்டு ஜி.அரியூர், அம்மன்கொல்லைமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. முருகவேணியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அம்மன்கொல்லைமேட்டைச் சேர்ந்தவர்கள். இதில் ஜி.அரியூர் பெரிய கிராமம் என்பதால், சுயேச்சையாகப் போட்டியிடும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேணி பலமான போட்டியாளராக இருந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் முருகவேணியின் பெயர் மற்றும் சின்னம் சீட்டில் என சிலர் வெளியில் வந்து தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். மோசடி நடைபெறுவதாக கூறியும், முருகவேணியை போட்டியின்றி தேர்வு பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சாலை மறியலில் குதித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தணை கலெக்டர், தாசில்தார், தேர்தல் அலுவலர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் இறுதியில் வேட்பாளரின் சின்னம் இல்லாமல் பதிவான 41 வாக்குகளை மட்டும் மீண்டும் பதிவு செய்வது எனவும், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்கனவே பதிவான 41 வாக்குகளை பிரித்து தனியாக எடுப்பது எனவும் தீர்மானமானது.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications