ஓடும் ரயில் என்ஜினில் தீ: விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பாசஞ்ஜர் ரயில் இன்ஜின் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி இருந்து புதுச்சேரி வரை செல்லும் பாசஞ்ஜர் ரயில் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம் போல விழுப்பரம் ரயில் நிலையம் அருகே வந்துபோது, ரயில் இன்ஜினில் இருந்து கரும்புகை கிளம்பியது.
சற்று நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த ரயில் டிரைவர் துரைவேல் உடனடியாக ரயிலை நிறுத்தினர். ரயில் நிறுத்தப்பட்ட காரணத்தை அறிந்த பயணிகளும், ஒவ்வொரு ஒருவராக துரிதகதியில் ரயிலை விட்டு இறங்கி ஓடினர்.
அதற்குள் ரயில் இன்ஜினில் தீப்பிடித்து எரிவதை குறித்து ரயில் டிரைவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் இன்ஜினில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
அதன்பின் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, ரயில் புதுச்சேரி நோக்கி இயக்கப்பட்டது. ரயில் இன்ஜினில் தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications