சென்னை 7 வாக்குச் சாவடிகளில் மட்டும் நாளை மறு வாக்குப் பதிவு
சென்னை: சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் மேயர் வேட்பாளர்கள், கவுன்சிலர் வேட்பாளர்கள் புகார் கொடுத்தனர். அதிமுகவினர் சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போட்டதாகவும், பூத் ஸ்லிப் கொடுக்காததால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
தேர்தல் தொடர்பான புகார்களை மாநகராட்சி ஆணையர்ட கார்த்திகேயன், தேர்ல் பார்வையாளர்கள், வாக்குச் சாவடி அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,
தேர்தல் புகார்கள் தொடர்பாக நன்கு பரிசீலிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் விதிகளின்படி அனைத்து ஆதாரங்களும், விசாரணை அறிக்கைகளும் தொடர்புடைய நிகழ்வுகளும் கவனமாக ஆராய்ந்து 7 மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
அதன்படி புரசைவாக்கம் ஆண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1740, 1743, அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி எண் 1746, கீழ்ப்பாக்கம் ரிசர்வ் வங்கி குடியிருப்பில் உள்ள பிரீமியர் பள்ளியில் உள்ள ஆண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1730, பெண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1730 அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி எண் 1731, சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடி எண் 1836 ஆகிய 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அக்டோபர் 20-ம் காலை 7 மணிக்கு முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். ஏற்கெனவே வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில்தான் மறுவாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுபோல விடியோ பதிவு செய்யப்படும்.
மறுவாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு வாக்குப் பதிவு தேவை என்று திமுகவும், 100க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு வாக்குப் பதிவு தேவை என்று பாமகவும் கோரி வருகின்றன. இரு கட்சிகளும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மறு தேர்தலுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதி்மன்றத்தில் வழக்கும் தொடர்நதுள்ளன. திமுகவோ, தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications