செங்கன்னூர் கோவிலில் பல கோடி மதிப்பிலான கோபுர கலசம் திருட்டு
ஆலப்புழை: செங்கன்னூர் மூத்தவழி சுப்ரமணியன் சுவாமி கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் என்ற உலோகத்தாலான கோபுர கலசத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், ஆலப்புழை அடுத்த செங்கன்னூரில் பண்டநாடு மூத்தவழி சுப்ரமணியன் சுவாமி கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை, கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் குழு செயற்கைகோள் உதவியுடன் ஆராய்ந்தனர். அப்போது இந்த கோவில் கோபுர கலசம் 'இரிடியம்' என்ற அரியவகை உலோகத்தால் தயாரிக்கப்பட்டது என கண்டறிந்தனர்.
இந்த தகவலை அறிந்த பல வெளிநாட்டு குழுவினர் அங்கு வந்து கோவிலை பார்வையிட்டு இரிடியம் கோபுர கலசம் உள்ளதை உறுதி செய்தனர். மேலும் அந்த கோபுர கலசத்தை விற்குமாறு விலை கேட்டு கோவில் நிர்வாகத்தினரை தொந்தரவு செய்து வந்தனர்.
கோவில் கோபுர கலசத்தின் மதிப்பை அறிந்து, பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு குழுவினர் அதை வாங்க 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை விலை பேசியும், தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில் பல மறை இந்த கோபுர கலசத்தை திருடி செல்ல முயற்சிகள் நடந்தது. இதனை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோபுர கலசத்தை பாதுக்காக்க, கோவில் சார்பாக பாதுகாப்பு குழுவும் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் நேற்று வழக்கம் போல மேல்சந்திகள் பூஜைகள் செய்வதற்காக கோவிலை திறந்தார். அப்போது கோபுர கலசம் மாயமாகி இருந்தது. கோவில் பின்புறம் ஏணி வைத்து அந்த கலசம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
தகவல் அறிந்து செங்கன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விலைமதிப்புள்ள இரிடியம் உலோக கோபுர கலசத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications