லாட்ஜ் அறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரி உடல்
சென்னை: சென்னையில் லாட்ஜ் ஒன்றில் மர்மமான முறையி்ல இறந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் இறப்பை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை உள்ள தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வந்தவர் வெங்கடேஷ். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தார். குடிப்பழக்கம் கொண்ட வெங்கடேஷ், அவ்வப்போது குடித்துவிட்டு அறைக்கு வருவது வழக்கம். சில நேரங்களில் நண்பர்களுடன் அறையிலேயே அமர்ந்து மது அருந்துவதும் உண்டு.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்கடேஷ் தங்கி இருந்த அறையை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. மேலும் அந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் அறையி்ன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையி்ல் வெங்கடேஷ் இறந்து கிடந்தது தெரிந்தது. பல நாட்களுக்கு முன் இறந்த வெங்கடேஷின் உடல் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து தகவல் அறிந்து சைதாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேஷின் அறையில் ஏராளமான மதுப்பாட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதிகளவில் மது அருந்தியதால் வெங்கடேஷ் இறந்தரா அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications