வைகோவுக்கு புதிய தெம்பை அளித்துள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுக, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஓவர் பேச்சு பேசும் விஜய்காந்தின் தேமுதிக, கூட்டணி தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக, கோஷ்டிப் பூசலுக்கும் பேராசைக்கும் பஞ்சம் இல்லாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மதிமுக மரியாதையான அளவுக்கு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

மதிமுக தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சிகளில் எட்டு கவுன்சிலர் பதவிகளையும், ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும், 48 நகராட்சி உறுப்பினர் பதவிகளையும், 7 பேரூராட்சி தலைவர் பதவிகளையும், 82 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும், 4 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் மதிமுக வென்றுள்ளது.

இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்கால வெற்றிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி கொடுத்தனர்.

ஆனால் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லாமல் மதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அடிப்படைச் செலவு கூட செய்ய முடியாமல் தேர்தலை சந்தித்தனர்.

இந்நிலையில் கூட குளித்தலை நகராட்சி தேர்தலில் வென்றுள்ளது. திருவேங்கடம், திருப்போரூர், கீரமங்கலம், உளுந்தூர்பேட்டை, எட்டையபுரம், கல்லுக்கூட்டம், வாள்வச்சகோஷ்டம் ஆகிய ஏழு பேரூராட்சி தலைவர் பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் சென்னையில் ஒரு இடத்தையும், திருச்சியில் மூன்று இடங்களையும், திருநெல்வேலியில் மூன்று இடங்களையும், கோவையில் ஒரு இடத்தையும், திருப்பூரில் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

எதிர்கால வெற்றிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் மதிமுக பல இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், நடுநிலையோடும், சுதந்திரமாகவும் நடத்தியபோதிலும் வாக்காளர்களுக்கு பணமும், பொருளும் வழங்கப்பட்டதை தடுக்க இயலாமல் போயிற்று.

பொருளாதார வசதிகள் இல்லாத போதிலும், மதிமுக வேட்பாளர்கள், இத்தேர்தல் களத்தில் கடுமையான உழைப்பை தந்து, பாராட்டத்தக்கவிதத்தில் பணி ஆற்றினர். கழகத் தொண்டர்கள் எதையும் எதிர்பாராமல் அர்ப்பணித்து உழைத்தனர்.

மதிமுகவுக்கு ஆதரவு தந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு, மனம் நிறைந்த நன்றியை கூறுவதோடு, தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை காக்கவும், ஊழல் அற்ற அரசியலை வென்றெடுக்கவும், நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் எங்கள் இயக்கம் பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+