உள்ளாட்சித் தேர்தல்... டெல்டா மாவட்டங்களில் சோலோவாகக் கலக்கிய அதிமுக!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், டெல்டா மாவட்டங்களில் எப்போதும் இல்லாத வகையில் மெகா வெற்றியைப் பெற்றுள்ளது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.

குறிப்பாக மத்திய மாவட்டங்களில் உள்ள திருச்சி மாநகராட்சி மற்றும் 12 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது இந்தக் கட்சி.

திருச்சி மாநகர மேயர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுகவின் ஜெயா, தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் விஜயா ஜெயராஜை 52415 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதேபோல, தஞ்சை - திருவாரூர் மாவட்டங்களில் 7 நகராட்சிகளை இந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை மத்திய மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூரில் 8 நகராட்சிகளை வென்றுள்ளது.

மதிமுக குளித்தலையில் வென்றுள்ளது. மற்ற இடங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளது இந்தக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக - கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் ஒரே ஒரு வார்டில் மட்டுமே இந்தக் கூட்டணி வென்றுள்ளது. மற்றபடி இக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரட்டை இலக்க வாக்குகள் கூட கிடைக்கவில்லை.

காங்கிரஸ் நிலைமை இன்னும் மோசம். ஒரு நகராட்சியில் கூட வெற்றி பெறவில்லை இந்தக் கட்சி. திருச்சி மாநகராட்சியில் ஒரு வார்டு மற்றும் கரூரில் நான்கு வார்டுகள் என்ற அளவில்தான் இந்தக் கட்சியின் உண்மையான பலம் உள்ளது.

மத்திய மாவட்டங்களில் உள்ள 78 பேரூராட்சிகளில் 45-ல் அதிமுகவும், 23-ல் திமுகவும், 4-ல் காங்கிரசும், ஒன்றில் மதிமுகவும் வென்றுள்ளன. தேமுதிக அணிக்கு எதுவும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+