இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது: சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

Crackers
சென்னை: இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி எச்சரித்துள்ளார்.

மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் அருகே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதிகளை மீறுவோரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தீபாவளியையொட்டி சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் குவிந்து வருவதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் உடமைகளும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந் நிலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறுகையில், இரவு 10 மணிக்கு மேல் எந்த இடத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது. பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. ராக்கெட் வெடிகளை மைதானங்களில்தான் வெடிக்க வேண்டும்.

விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறுவோரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நகர் முழுவதும் ரோந்து சுற்றி வருவார்கள்.

மேலும் மாநிலம் முழுவதுமே தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+