ஓட்டுக்கு லஞ்சம் வழக்கு: எம்பி அமர் சிங் ஜாமீனில் விடுதலை
டெல்லி: எம்பிக்கள் வாக்களிகக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கடந்த மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி அமர் சிங்கை டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.பி.களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சி முன்னாள் உறுப்பினருமான அமர் சிங் கடந்த மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமர் சிங்கிற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதையடுத்து கடந்த மாதம் 12ம் தேதி அவர் டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வரை அவர் அங்கு தான் உள்ளார்.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அது 24ம் தேதி (இன்று) வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே அமர் சிங் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் எப்பொழுதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய மருத்துவக் கழக மருத்துவமனையின் அறிக்கையை டெல்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இந்நிலையில் அமர் சிங் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் ரூ. 1 கோடி பிணையத் தொகை செலுத்த வேண்டும், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications