சிவகங்கையில் எஸ்.ஐ.யை துரத்திச் சென்று கத்தியால் குத்திய கும்பலுக்கு வலைவீச்சு
சிவகங்கை: சிவகங்கையில் எஸ்ஐ ஒருவரை துரத்திச் சென்று கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டியில் சிறப்பு எஸ்ஐ ஆக இருப்பவர் கார்மேகம். நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பினார். அண்ணாமலை நகரில் வசிக்கும் அவரது வீட்டின் அருகே உள்ள சாலை வரை உடன் பணிபுரியும் மற்றொரு எஸ்ஐ தனது பைக்கில் கொண்டுவந்து விட்டார்.
வீட்டின் அருகே நடந்து சென்றபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் கார்மேகத்தை வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க கார்மேகம் ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்திப்பிடித்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டது.
இதில் படுகாயமடைந்த கார்மேகம் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகங்கையைச் சேர்ந்த கோபால், செந்தில், ஜெயபால், முருகன், பரமசிவம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications