தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது- 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்!

Subscribe to Oneindia Tamil

Satellite View
சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் அக்டோபர்24ம் தேதிதான் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அதேபோல இந்த ஆண்டும் அதே நாளில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா மறறும் கடலோர ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 24ம் தேதி தொடங்கியது.

வங்கக் கடலில் மன்னார் வளைகுடா முதல் ஆந்திரா வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாடக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரங்களில் அதிக அளவாக சங்கரன்கோவிலில் 10செமீ மழையும், செங்குன்றத்தில் 9 செமீ மழையும், பண்ருட்டியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+