உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி: சரத்குமார்
மதுரை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை மகத்தான வெற்றி பெற்ற வைத்த தமிழக மக்களுக்கு சத்ததுவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏற்கனவே தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத்திட்டங்கள் யாவும் முழுமையாக மக்களிடம் சென்றடைய இந்த வெற்றி நிச்சயம் உதவும்.
இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து தோழமை கட்சி தோழர்களுக்கும், சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications