வெள்ளப் பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. அந்த அருவியில் குளிக்க தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருவதால் அங்கு எப்பொழுது பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் மேகமலை ஹவேசில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கற்கள், கட்டைகள் போன்றவை அடித்து வரப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று அருவியின் அழகை பார்த்து செல்கின்றனர்.
ராஜபாளையத்தில் காட்டாற்று வெள்ளம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அங்கு வழிபாடு நடத்துவதற்காக சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆற்றை கடந்து கோவிலுக்கு சென்றனர். அப்போது ஆற்றில் சிறிதளவு தண்ணீரே சென்றது.
திடீர் என்று அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு சென்றவர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுமார் 50 பேரை கயிறு மூலம் ஆற்றை கடக்க செய்து பத்திரமாக மீட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications