கிரண்பேடி எங்களிடம் அதிகமாக பணம் வசூலித்துவிட்டார்! - தன்னார்வ அமைப்பு புகார்

கிரண்பேடி இவ்வளவு அதிக தொகை வசூலித்தது, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட பிறகே தங்களுக்குத் தெரியும் என்றும், இது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஜார்ஜ் கிரகாம் கூறியுள்ளார்.
பொது நிகழ்ச்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள கிரண் பேடிக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் ஏராளமாக பணம் வசூலிக்கிறார், கட்டணமாக. இதைத் தவிர, அவருக்கு விமானப் பயணக் கட்டணம் வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர் என்பதால் கிரண் பேடிக்கு விமானக் கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை தரப்படுகிறது. இந்த சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் அவர், ஏற்பாட்டாளர்களிடம் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு வசூலித்துக் கொள்கிறார். இப்படி அதிகமாகப் பெற்ற பணத்தை தனது தலைமையில் இயங்கும் ட்ரஸ்டில் அவர் செலுத்தியுள்ளார்.
அவரது இந்த செயல் சட்டப்படி தவறானதே ஆகும். பணியிலிருந்த போதே அவர் இதுபோல செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 12க்கும் மேற்பட்ட ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த கிரண்பேடி, என்ன சொல்வதென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தார்.
ஆமாம், நான் இப்படி அதிக பணம் பெற்றது உண்மைதான். நான் இப்படி பெற்றது பணம் கொடுத்தவர்களுக்கே தெரியும் என முதலில் அவர் கூறினார்.
ஆனால் அடுத்த சிலமணி நேரங்களில், பணம் கொடுத்த தன்னார்வ அமைப்புகள் பல கொதித்துப் போய், கிரண் பேடியை திட்ட ஆரம்பித்துவிட்டன. ஹைதராபாதைச் சேர்ந்த அமைப்பு ஒன்று கிரண் பேடி செய்தது அவமானத்துக்குரியது என்றும், இதைவிட எங்களிடம் நேர்மையாக உண்மையைச் சொல்லி அதிகப் பணத்தை கேட்டே வாங்கியிருக்கலாமே என்றும் கூறியிருந்தது.
அதுவரை அன்னா குழுவை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த அத்தனை பேரும், கிரண் பேடியின் கேவலமான மோசடி, அல்பத்தனத்தைக் கண்டு பெரிதும் அதிர்ச்சியடைந்து 'Corrupt Team Anna' என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதைக் கண்டு மேலும் பதட்டத்துக்குள்ளான கிரண் பேடி, தனது உளறலின் அடுத்த கட்டமாக, அன்னா ஹஸாரேவோடு இணைந்து ஊழலை எதிர்க்கப்போராடும் தன்னை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதாகவும், வேண்டுமானால் தன்னை தூக்கில் போடட்டும். அப்படியாவது அன்னாவின் இயக்கத்தைக் காக்க வேண்டும் என்றும் வார்த்தைகளைக் கொட்டினார்.
இது மேலும் பல விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன. தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள மனமின்றி, மக்களின் இரக்கத்தைப் பெற இஷ்டத்துக்கும் உளறுகிறார் கிரண்பேடி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஏவியேஷன் இன்டஸ்ட்ரீஸ் கில்ட் எனும் தன்னார்வ நிறுவனம் கிரண் பேடி தங்களிடம் அதிக பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத் தலைவர் ஜார்ஜ் ஆப்ரஹாம், தி ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களிடம் கிரண் பேடி அதிகமாக வசூலித்திருக்கும் உண்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை பார்த்த பிறகுதான் தெரிந்தது.
இது அநியாயம். அவர் பதவிக்கும் அந்தஸ்துக்கும் பொருத்தமில்லாத, நேர்மையற்ற செயல். இதைவிட அவர் எங்களிடம் பணம் கேட்டுப் பெற்றிருக்கலாம்.
குறிப்பிட்ட எங்கள் விழாவுக்கு புனேயிலிருந்து வந்துள்ளார் கிரண் பேடி. அதே நாளில் இவர் வேறொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். எகானமி க்ளாஸில் வந்த அவர் பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். அதுவும் டெல்லி - மும்பை மார்க்கத்துக்கு. அதே தேதியில் மும்பையில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதற்காகவும் தனியாக இரு வழி விமானக் கட்டணத்தைப் பெற்றுள்ளார்.
ஒரு பயணம்தான். ஆனால் இருவரிடமும் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட். அதுவும் வராத ஊரிலிருந்து வந்ததாக கணக்கு காட்டியுள்ளார். இது எத்தனை மோசடியானது! இவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்," என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு கிரண் பேடி கூறியுள்ள பதிலில், "சேமிப்பு என்பதை ஒரு குற்றமாகப் பார்க்கிறீர்களே... இது ஆச்சர்யமாக உள்ளது. நான் அந்த நிகழ்ச்சிக்கு பணம் பெறவில்லை. ஆனால் உயர் வகுப்பு விமானக் கட்டணம் பெற்றேன். நான் சிக்கன வகுப்பில், சலுகையில் பயணம் செய்தேன். மீதிப் பணத்தை எனது ட்ரஸ்டில் சேமித்தேன். இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் என்ன பெற்றேன் என்பது தேவையற்றது. இது நிச்சயமாக சேமிப்பு. சேமிப்பை நீங்கள் குற்றம் என்பீர்களா?" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications