திருவண்ணாமலை: ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன்
கலசப்பாக்கம்: பள்ளி மாணவனை கடத்தி வைத்து கொண்டு, 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுக்கும் மர்மகும்பலை பிடிக்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த வெளுகனந்தலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(43). மத்திய பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு வினோத் குமார்(12) என்ற மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 20ம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வினோத்குமார், திடீரென மாயமானார்.
இரவு நெடுநேரமாகியும் வினோத் குமாரை காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் வினாத்குமார் கிடைக்கவில்லை. இதனால் கலசப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். மேலும் வினாத்குமாரை காணவில்லை என நோட்டீசு அடித்து பல இடங்களில் ஒட்டினர்.
இந்த நிலையில், வினோத் குமாரின் பெரியப்பா சம்பத் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க 30 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சிறுவனை கொலை செய்து விடுவோம் எனவும் மர்மநபர் மிரட்டி உள்ளார். அதன்பின் வினோத்குமாரின் தாய் பரிமளாவை தொடர்புக் கொண்ட மர்மநபர், அவரிடமும் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து வினோத் குமார் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். கடத்தப்பட்ட வினோத்குமாரை கண்டுபிடிக்க, போளூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு முகமது பலுலுல்லா, கலசப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வினோத்குமாரை தேடி சென்னை, பெங்களூர் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வினாத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications