கனமழை: சென்னை உள்பட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல புதுச்சேரியிலும் கன மழை பெய்துவருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு்ள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து சென்னை உள்பட இந்த 9 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications