காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணை மூடப்பட்டது
சேலம்: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக சம்பா நெல் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ளது. இதனால் தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களும் கன மழையை சந்தித்து வருகின்றன.
இந்த மாவட்டங்களில் தற்போது சம்பா நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில பகுதிகளில் குறுவை அறுவடைப் பணிகளும் நடந்து வருகின்றன.
சம்பா பயிருக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. கன மழை பெய்து வருவதால் இரு நாட்களுக்கு முன் நீர் திறந்துவிடப்படுவது 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் இந்த மழையால் தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே போல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 85.6 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,244 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் வினாடிக்கு 2,117 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
மேட்டூர் அணையில் அதிகபட்ச நீர் தேக்க அளவு 120 கன அடியாகும்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications