கேரளாவில் ஈரோடு நர்சு கடத்தி சென்று கற்பழிப்பு
ஈரோடு: ஈரோட்டில் நர்சாக வேலை செய்யும் பெண் ஒருவரை, கேரளாவில் ஆட்டோவில் கடத்தி சென்று கற்பழித்த 4 பேரை கைது செய்ய மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை அடுத்த தலசேரி பகுதியை சேர்ந்த 34 வயதுள்ள பெண் ஒருவர், ஈரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை செய்கிறார். இவர் கடந்த 24ம் தேதி ஈரோட்டில் இருந்து தலசேரிக்கு ரயிலில் சென்றார்.
தலசேரி ரயில் நிலையத்தில் சென்று இறங்கிய அப்பெண்ணை மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பல், அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. தலசேரியில் ஆள்நடமாட்டம் குறைந்த கடற்கரைக்கு கொண்டு சென்று, அப்பெண்ணை 4 பேரும் கற்பழித்தனர்.
அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி வழியாக சென்ற சிலர் அவரை காப்பாற்ற வந்தனர். இதனை கண்ட 4 பேரும் அங்கிருந்து ஓடிவி்ட்டனர். அப்பெண்ணை மீட்ட அப்பகுதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலை அறிந்த கண்ணூர் மாவட்ட அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சவுகத் அலி கூறியதாவது, இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால் தலசேரி நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை ஈரோடு கொண்டு சென்று சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications