அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ஹத்ப் ஏவுகணை: பாக். சோதனை
இஸ்லாமாபாத்: 700 கி.மீட்டருக்கு அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் மிக்க ஹத்ப்- VII (பாபர்) என்ற ஏவுகணை நேற்று வெற்றிக்கரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், பாபர் ஏவுகணை மிகக் குறைந்த உயரத்தில் பறக்க கூடியது. மிக துல்லியத் தன்மையும், ரேடரில் காண முடியாத சிறப்பு தன்மையும் கொண்டது. பாபர் ஏவுகணையி்ல் அணு ஆயுதங்களை மட்டுமின்றி, பிற ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும்.
நேற்று நடந்த சோதனையின் போது, பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காலித் ஷமீம், ஓய்வுப் பெற்ற மற்ற ராணுவ அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் சோதனையி்ல் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை பாராட்டினர் என்றனர்.












Click it and Unblock the Notifications