தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை துவங்கிய மழை இன்று காலை 8 மணி வரை இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதை தொடர்ந்து மாவட்டத்தில் உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் உப்பளங்களில் வாரப்பட்ட உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தற்காலிகமாக ஓலை கொண்டு மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications