முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மரணம் - கருணாநிதி நேரில் அஞ்சலி

தொழிற்சங்க தலைவராக அறியப்பட்ட சுப்பு, சிபிஐ சார்பில் 1967-ல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் சுப்பு. பின்னர் 1969-ல் திமுகவில் இணைந்தார். திமுகவில் மேடைப்பேச்சாளராகவும் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராகவும் திகழ்ந்தார்.
திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்குச் சென்றவர். கடந்த 1971 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் ராஜபாளையம், வில்லிவாக்கம் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
ஆனால் 1978-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். எம்எல்சியாக தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ், தமாகா என கட்சிகளில் இருந்தார். 2001-ல் மீண்டும் அதிமுகவுக்கு வந்தார்.
ஆனால் 2007-ம் ஆண்டு கருணாநிதியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார் சுப்பு. அதே ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
இவர், மனைவி, மகன், 2 மகள்களுடன் லாயிட்ஸ் காலனி வீட்டில் வசித்துவந்தார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69.
மறைந்த க.சுப்பு உடலுக்கு திமுக தலைவர் கலைஞர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தோழர் சுப்புவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு. அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நேரடியாகவே அறிந்தவன் நான். அவருடைய பேச்சாற்றலும், வாதத் திறமையும் பகைவர்களையும் வசீகரிக்கக் கூடியவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். அவருடைய மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கும், சாதாரண சாமான்ய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும், மனைவி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
வைகோ இரங்கல்
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் க.சுப்பு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்," என்று கூறியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications