போஸ்னியா அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது
சரஜிவோ: போஸ்னியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்திய செர்பியாவை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
போஸ்னியா நாட்டின் தலைநகர் சரஜிவோவில் அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வழியாக நீண்ட தாடியுடன் ஒரு நபர் நடந்து சென்றார். அப்போது அந்த நபர் திடீரென தூதரகத்தை நோக்கி கலாஷ்னிகோவ் வகையை சேர்ந்த தானியங்கி துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட ஆரம்பித்தார். அதை கவனித்த தூதரக பாதுகாப்பு போலீசார் அதை எதிர்த்து சுட்டனர்.
சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ்காரர் மற்றும் தானியங்கி துப்பாக்கியால் சுட்ட நபரும் காயமடைந்தனர். காயமடைந்து கீழே விழுந்த அந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் செர்பியாவை சேர்ந்த மெவுல்தின் ஜசா ரெவிக்(23). இவர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications