மரியம் பிச்சையின் மகனுக்கு திருச்சி துணை மேயர் பதவி!
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம்.ஆசிக் மீரா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆவார்.
சென்னை உட்பட 10 மாநகராட்சிகளுக்கு துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் நேரடியாகத் தேர்தல் நடந்தது. அதில் அனைத்து மேயர் பதவிகளையும் அதிமுகவே பிடித்தது. பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளையும் அதிமுகவே பிடித்துள்ளது.
இந் நிலையில் 10 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிமுக சார்பில் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று ஜெயலலிதா அறிவித்தார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே துணை மேயர்களாகவுள்ளனர்.
இதில் திருச்சி துணை மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம்.ஆசிக் மீரா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆவார்.
மரியம் பிச்சையின் மறைவையடுத்து திருத்தி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தபோது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பரஞ்சோதியை வேட்பாளராக்கி வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா. இந் நிலையில் மரியம் பிச்சையின் மகனுக்கு துணை மேயர் வாய்ப்பைத் தந்துள்ளார்.
இவர் திருச்சி மாநகராட்சியின் 27-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications