என் பெயரை மறைக்கிறாங்களே! - கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:
கேள்வி: 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அரசு நிலத்தைத் தோட்டக்கலை சங்கத்திற்கு அ.தி.மு.க. அரசு வழங்கியது பற்றி எழுதியிருந்தீர்களே, அது என்னவாயிற்று?
பதில்: அண்ணா மேம்பாலத்திற்கு மிக அருகிலே அமைந்துள்ள; அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள - 118 கிரவுண்டு நிலத்தை தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கி 22.8.2011 அன்று வெளியிட்ட ஆணையின் மூலமாக உத்தரவிட்டுள்ளதை நான் எழுதி; நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் இதனைத் தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா எனக் கேட்டு எழுதியிருந்தேன்.
அ.தி.மு.க அரசின் சார்பில் முதல்-அமைச்சரோ, எந்த அமைச்சருமோ இன்றுவரை பதில் அளிக்காமல், சென்னை மாவட்ட கலெக்டரை விட்டு பதில் என்ற பெயரில் ஒரு மறுப்பினைத் தெரிவித்திருந்தார்கள். அவரும் அந்த இடம் வழங்கப்படவில்லை என்று மறுக்கவில்லை.
கொடுத்தது உண்மைதான்; தோட்டக்கலைச் சங்கத்தின் கவுரவ செயலாளர், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆஜராகி கொடுத்த ஆவணங்களின் அடிப்படையிலே அந்த நிலத்தை வழங்கினோம் என்று சொல்லியிருக்கிறார். அரசு பதில் அளிக்காமல், கலெக்டர் பொறுப்பிலே இருப்பவரின் மூலமாக விளக்கம் அளித்திருப்பது ஒன்றே என் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது என்று நான் மீண்டும் தெளிவுபடுத்திய பிறகும், அரசின் சார்பில் எந்தப் பதிலும் வரவில்லை.
சட்டம்-ஒழுங்கு லட்சணம்
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு?
பதில்: ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களுக்குள் பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு உயிர்களை பலி வாங்கிய ஒரு நிகழ்ச்சி போதாதா?
கேள்வி: தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்த ஜெயலலிதா, அண்ணா நூற்றாண்டு நினைவாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை முறையாக பாதுகாக்கிறாரா?
பதில்: அதற்கும் அந்த கதிதான்! பொதுவாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட இதுபோன்ற இடங்களிலே உள்ள கல்வெட்டுக்களில் என் பெயர் இருப்பதைப் பொறுத்துக்கொள்ளாமல் இலை, தழை, பூக்களைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆட்சியினர் அண்ணா பெயரில் தி.மு.க. ஆட்சி எழுப்பியுள்ள அந்த நூலகத்தைக் கூடப் புறக்கணிக்கின்றனர் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
கேள்வி: வருவாய்த் துறையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் ஐ.ஏ.எஸ். தகுதி கொடுப்பதிலே தவறு நடப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: தேர்வாணைக்கழகத்தின் மீது தமிழக அரசு பூதாகாரமாக நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் வருவாய்த் துறையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் ஐ.ஏ.எஸ். தகுதி கொடுப்பதற்கு நான்கு இடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்தப் பதவியை ஏலம் விட்டு, யார் அதிகத் தொகை தருகிறார்களோ அவர்களுக்கு வழங்கப் போவதாகவும், குறைந்தபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருப்பதாகவும் பத்திரிகைகளிலேயே செய்தி வந்துள்ளது. எந்த அளவிற்கு அது உண்மை என்பது போகப் போகத் தெரியும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications