லோடு ஆட்டோ மோதி 3 மாணவர்கள் பலி
நாசரேத்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் லோடு ஆட்டோ மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
தூத்தக்குடி மாவட்டம் நாசரேத் ரோஜாப்பூ நகரை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன் மகன் காலேப். ராஜரத்தினம் மகன் குட்டி என்ற அருள்தாஸ். கென்னடி மகன் டேனியல். மாணவர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்கள். காலேப் நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கிலும், அருள்தாஸ் நாசரேத்திலும் உள்ள பாலிடெக்னிக்கிலும், டேனியல் நாசரேத்திலிலுள்ள பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பும் படிந்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் மாலை நாசரேத்தில் இருந்து ஆழ்வார்திருநகரிக்கு மோட்டார் சைக்களில் சென்றனர். காலேப் மோட்டார்சைக்கிளை ஓட்ட மற்ற 2 பேரும் பின்னால் உட்கார்ந்து சென்றனர்.
நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே உள்ள அரசாங்கநகர் பகுதியில் வந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. இதில் மாணவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களில் காலேப் சம்பவ இடத்திலேயே பலியானார். அருள்தாசும், டேனியலும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே அருள்தாஸ் இறந்தார்.
பிளஸ்டூ மாணவரான டேனியல் பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications