பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் மனம் உடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ளது வேகாகொல்லை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தெய்வலிங்கம் (32). இவருக்கு கலைச்செல்வி (28) என்ற மனைவியும், கலை முருகன் (3) என்ற மகனும், காவ்யா (6) என்ற மகளும் உள்ளனர்.
தெய்வலிங்கம் சமீபகாலமாக கூலி வேலை கிடைக்காமல் திண்டாடி வந்தார். இதனால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். போதிய வருமானமும் இல்லாமல், வேலையும் கிடைக்காமல், கடனும் ஏறி வந்ததால் மனம் உடைந்தார் தெய்வலிங்கம்.
மேலும் கொடுத்தவர்களும் கேட்க ஆரம்பித்து நெருக்கடி தந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்புக்கு தனது மனைவியுடன் சென்றார். அங்குஇருவரும் தனித் தனியாக புடவையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டனர்.
அதற்கு முன்பு மகன், மகள் இருவரையும் மரக் கிளைகளில் தூக்கில் தொங்க விட்டு கொன்று விட்டனர். காலை தோப்புக்கு வந்த மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications