அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம்: பாஜக
சென்னை: தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லும் பாதையில் வைத்திருந்த வெடிகுண்டை கண்டுபிடித்த இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் போராட்டத்தின் அங்கமாக மக்கள் விழிப்புணர்வு யாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் அத்வானியின் ரதயாத்திரை மதுரையிலிருந்து தென்காசி செல்லும் வழியில் அத்வானியை கொலை செய்யும் நோக்கத்தோடு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.
மதுரை அருகே ஆலம்பட்டி கிராமத்திற்கு அருகே பாலத்திற்கடியில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுகளை கண்டுபிடித்து அதனை காவல்துறைக்கு தெரிவித்து பெரும் இழப்பில் இருந்து தடுத்த செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகியோர்களின் சிறந்த செயல்பாட்டை பாரதீய ஜனதா கட்சி தலைவணங்கி பாராட்டுகிறது. அவர்களது பணியை பாராட்டி 3ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கவுரவித்தும் தேசிய இணை பொதுச் செயலாளர் சதீஸ் சிறப்பு செய்ய உள்ளார்.
இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழங்கவும் தமிழக பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. அத்வானி யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், காவல்துறைக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். காவல்துறை உடனடியாக குண்டு வைத்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications