8ம் தேதி சீனா செல்லும் நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
அகமதாபாத்: சீனா நாட்டின் அழைப்பை ஏற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி சீனா செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் குஜராத் மாநிலத்துக்கு வந்த சீன அமைச்சர் அய் பிங்க் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் பல துறைகளில் முதலீடு செய்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு தான் பிரமிப்பு அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு அய் பிங்க் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று மோடி வரும் 8ம் தேதி சீனா செல்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மோடி குஜராத்தில் முதலீடு செய்யுமாறு சீன நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் நிறுவனத்தை தனது மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு மோடி கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.

அமெரிக்கா மோடிக்கு அனுமதி அளிக்காவிட்டாலும், சீனா சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக உள்ளது.

கடந்த ஜூன் மாதம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சி துறையில் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இருதரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+