For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி தினந்தோறும் 200 எஸ்எம்எஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இனி தினந்தோறும் 200 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம் என ட்ராய் அனுமதி வழங்கியுள்ளது.

சில வாரங்கள் முன்பு வரை எஸ்எம்எஸ் அனுப்ப கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. இதைப் பயன்படுத்தி டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் எக்கச் சக்க எஸ்எம்எஸ்களை அனுப்பி வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்து வந்தனர்.

இதனால் ஏராளமான புகார்கள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் குவிந்தது. எனவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மட்டுமே அனுமதிக்கப்படும் என சில தினங்களுக்கு முன் ட்ராய் அறிவித்தது.

இதனால் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின. இந்த வரையறையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்தன.

இந்த நிலையில் 100 எஸ்எம்எஸ் என்ற வரையறையை 200 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது ட்ராய்.

நிறைய பிரதிநிதிகள் எஸ்எம்எஸ் வரையறையை உயர்த்த வேண்டும் என்று கேட்டு வந்தன. எனவே நாள் ஒன்றுக்கு 200 எஸ்.எம்.எஸ்.கள் வரை அனுப்ப அனுமதி அளிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

English summary
Telecom consumers will now be able to send up to 200 SMSes per day from a SIM, as against the earlier limit of just 100 SMSes per day imposed by the Telecom Regulatory Authority of India (Trai).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X