ராமதாஸை இதுவரை யாரும் பேசாத வகையில் மிக இழிவாகப் பேசினார் வேல்முருகன்- ஜி.கே.மணி

முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கம் குறித்து ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வேல்முருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பாமக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாஸை இதுவரை யாரும் பேசாத வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, இழிவான வார்த்தைகளால் வேல்முருகன் ஒருமையில் பேசியுள்ளார். இதைக்கேட்டு பொறுக்கமுடியாத பல நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதன்பிறகும் பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
இதைத் தாங்க முடியாத கடலூர் மாவட்ட நிர்வாகிகள், வேல்முருகனை இனியும் கட்சியில் வைத்திருக்கக்கூடாது என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எனினும் வேல்முருகன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்தனர். ஆனால் வேல்முருகனோ தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்றதைத் தவிர வேறு கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்துவந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் பாமகவுக்காக பணியாற்றவில்லை.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி பாமக தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன் 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் தம்மைப் பற்றி வேல்முருகன் பேசிய பேச்சின் முழு வடிவத்தையும் வேதனையுடன் படித்துக் காட்டினார். பாமகவிற்காக ஆரம்பத்திலிருந்தே அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்துவரும் தம்மை எவரும் இப்படியெல்லாம் விமர்சித்ததில்லை என்றும் தம்மையும், ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளையும் விமர்சித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது கருத்தை பாமக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்ததுடன் எங்களைப் பற்றியும் அவதூறாகப் பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்று மணி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications