மதுக் கடைகளை 7 நாள் மூடியதால் பார் உரிமையாளர்களுக்கு ரூ. 17 கோடி நஷ்டம்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 6200 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. குடிகாரர்கள் மது அருந்துவதற்கு வசதியாக இக்கடைகளை ஓட்டி பார் அமைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முலம் டெண்டர் விடப்பட்டு தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. மதுபானங்கள் விற்பனை மற்றும் பார்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதன் முலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலை ஓட்டி மாநிலம் முழுவதும் 5 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. இதைபோல் தேவர் ஜெயந்தியை ஓட்டி அக் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 700 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
7 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் மது கடைகளுக்கு மட்டுமல்லாது பார்க்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பார் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு ரூ.15 கோடி அளவிலும், தென்மாவட்டங்களில் கூடுதலாக 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ரு.2 கோடியாக மொத்தம் 17 கோடி பார் உரி்மையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசு பதவியேற்றது. இதையடுத்து கடந்த ஜீன் மாதம் நடைபெற்ற டாஸ்மாக் பார் ஏலத்தில் பெரும்பாலானவை அதிமுகவினருக்கு ஓதுக்கப்பட்டது. ஏற்கனவே பார்கள் நடத்தி வந்தவர்கள் தங்களது கடைகளை விட்டுகொடுக்க முன்வாரததால் பெரும்பாலான பார்கள் 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை காலதாமதமாக புதிதாக ஏலம் எடுத்தவர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. அப்போதே பல கோடி ரூபாய் பார் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்தநிலையில் டாஸ்மாக் தொடர் விடுமுறை காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் அக்டோபர் மாதத்திற்கான வாடகையை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர் பார் உரி்மையாளர்கள்.


Click it and Unblock the Notifications
