மெத்தனமாக இருக்கும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல்: மேயர் விரட்டியடிப்பு
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சியைக் கண்டித்து ஆயிரக் கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வெகு தாமதமாக வந்த மேயர் விசாலாட்சியை மக்கள் ஆவேசமாக முற்றுகையிட்டு அங்கிருந்து அகன்று போகச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் நேற்று திடீர் என்று மழை கொட்டித் தீர்த்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்களில் மழை நீர் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. நீர் செல்லும் வழிகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்படாமல் உள்ளதால் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாக்கடை அடைப்புகள் மற்றும் நீர் செல்லும் வழியில் உள்ள அடைப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி மெத்தனமாக உள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மாநகராட்சியைக் கண்டித்து ஆயிரக் கணக்கான மக்கள் திருப்பூர் காங்கயம் சாலையில் மறியலில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மேயர் விசாலாட்சியும், அதிகாரிகளும் வந்தனர். ஓட்டு கேட்டு மட்டும் சரியான நேரத்தில் வரும் நீங்கள், மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் தாமதாக வருவதா என்று கூறி ஆயிரக் கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய மேயர் விசாலாட்சி அதிகாரம் தூள் கிளப்ப பேசியதால் மக்கள் அவரையும், அதிகாரிகளையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தது
நொய்யல் ஏற்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி 14 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று அங்கு வெள்ளம் வடிந்துள்ளது. குறிப்பாக ஜம்மனை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் மக்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications