இத்தாலியை ஆட்டிப் படைத்த 'செக்ஸ் மன்னன்' பெர்லுஸ்கோனிக்கு விழுந்தது திரை!

இத்தாலி நாட்டு அரசியலில் கடந்த 20 வருடங்களாக தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் பெர்லுஸ்கோனி. சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, உயரிய இடத்திற்கு முன்னேறி, பின்னர் பல்வேறு ஊழல்களில் பெயரைக் கெடுத்துக்கொண்டார் இவர் மீது பல்வேறு செக்ஸ் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
1936-ல் மிலன் நகரைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், மூத்த மகனாக பிறந்தவர் பெர்லுஸ்கோனி. 1961-ல் சட்டப் படிப்பை முடித்த அவர் மிகச்சிறந்த பாடகர். இந்த திறமையினாலேயே பொழுதுபோக்கு கப்பல் ஒன்றில் பகுதிநேர பாடகராக பணியாற்றி வந்தார். ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்து நகரின் முக்கிய நபராக உருவான பெர்லுஸ்கோனி 993-ல் போர்ஸா இத்தாலியா கட்சியைத் தொடங்கி அரசியலில் தடம் பதித்தார்.
திருமண முறிவும் பல பெண்கள் தொடர்பும்
1965-ல் கார்லா இல்விராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்த நிலையில், வெரோனிகா லரியோ உடன் பெர்லுஸ்கோனிக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து, 1985-ல் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 1990-ல், இரண்டாவதாக வெரோனிகாவை மணந்தார்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மூன்றாவதாக நியோமி லிடிசியா என்ற இளம்பெண் பெர்லுஸ்கோனியின் வாழ்க்கையில் குறுக்கிடவே , 2009-ல் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார். இவர்களைத் தவிர பெர்லுஸ்கோனிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கிசு கிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஒரே நாளில் எட்டு பெண்களை சமாளித்தும் சாதனை படைத்ததாக டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மகா உல்லாசப் பிரியர் பெர்லுஸ்கோனி. இவரைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு இத்தாலி நாட்டு டாக்டர் (இவர் பெர்லுஸ்கோனிக்கு மிகவும் நெருங்கிய நண்பர்) பெர்லுஸ்கோனியின் உடல் திறமை என்னை வியக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் அவரால் பல பெண்களுடன் இருக்க முடிவதற்கு அவரது மனோதிடமும், உடல் வலிமையும்தான் காரணம். அவரது வயதுக்கு அவர் இப்படி இன்பத்தில் ஈடுபடுவது வியப்பான விஷயம் என்று கூறியிருந்தார்.
அந்த நளவுக்கு இத்தாலியே பெரும் பொருளாதார சிக்கலில் நலிவடைந்திருந்த போதிலும், எப்போதும் பொலிவுடன் திகழ்ந்தவர் பெர்லுஸ்கோனி.
நாட்டின் பொருளாதார நிலைமை நாசமாகி வந்தபோதிலும், தனது உல்லாச கேளிக்கைகளை பெர்லுஸ்கோனி குறைத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் தனது விருந்தில் பங்கேற்க அழகிகளுக்கு ரூ.13 கோடி வரை அவர் செலவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உல்லாசமாக இருப்பதற்காக அரசு செலவில் விமானம் அனுப்பி பெண்களை வரவழைத்து இன்பம் அனுபவித்தவர் பெர்லுஸ்கோனி. அவருக்கு பெண்களை அனுப்பி காரியம் சாதிப்பதற்காகவே பல ஏஜென்டுகளும் பெர்லுஸ்கோனியின் பெட்ரூம் பக்கம் வலம்வந்தபடி இருந்தனர்.
சமீபத்தில் தனது செக்ஸ் லீலைகள் தொடர்பாக வழக்கிலும் சிக்கினார் பெர்லுஸ்கோனி. தன்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள், புகார்கள் குவிந்து நின்றபோதிலும் சற்றும் அதைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல வாழ்ந்து வந்தவர் பெர்லுஸ்கோனி.
தனது சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே 3 தொலைக்காட்சி சேனல்களையும் பெர்லுஸ்கோனி நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்கார இத்தாலியர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் பெர்லுஸ்சோனி. பல்வேறு தொழில்களிலும் கால் பதித்த சூழலில், அவர் மீது வரி மோசடி, போலி கணக்கு, நீதிபதிக்கு லஞ்சம் அளித்தது என ஏராளமான வழக்குகள் பதவி செய்யப்பட்டன.
ஐம்பது முறை தப்பியவர்
1994-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற பெர்லுஸ்கோனி, இத்தாலி நாடாளுமன்றத்தில், இதுவரை 50க்கும் அதிகமான நம்பிக்கை வாக்கெடுப்புகளை வெற்றிகரமாக சந்தித்துள்ளார்.
இத்தாலியின் 50 ஆண்டுகால அரசியலில், 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை முதல்முறையாக தடையின்றி நிறைவு செய்தவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. இருப்பினும் 50க்கும் அதிகமான நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்த பெர்லுஸ்கோனி கடைசியில் வீழ்ந்துவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications