தேர்தல் நடைபெறாத உள்ளாட்சி இடங்களுக்கு 27ம் தேதி மறு தேர்தல்- மனுத் தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் நடைபெறாத இடங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் இறப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, சில இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இடங்களுக்கு வருகிற 27-ந் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை மாநகராட்சி 15-வது வார்டு உறுப்பினர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவர். கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவியிடம்,
ஊரக உள்ளாட்சிகளில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், வார்டு எண்.1 உறுப்பினர் பதவியிடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், வார்டு எண்.18, உறுப்பினர்கள் பதவியிடத்திற்கும், ஆகியவற்றிற்கு கட்சி அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
கட்சி அடிப்படையில்லாமல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், நத்தம்பேடு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஆற்பாக்கம் கிராம ஊராட்சி வார்டு எண்.9, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் சே.கொத்தமங்கலம் கிராம ஊராட்சி வார்டு எண்.3, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானூத்து கிராம ஊராட்சி வார்டு எண்.1 மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலன்குளம் கிராம ஊராட்சியின் வார்டு 1,5 மற்றும் 8-க்கான உறுப்பினர் பதவியிடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான மனு தாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 17-ந் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெறும் நாள் 19-ந் தேதி, வாக்குப் பதிவு 27-ந் தேதி நடக்கிறது. 29-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் 30-ந்தேதி முடிவடையும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications