தூத்துக்குடியில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஓடையில் மூழ்கி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன் பிடிக்கச் சென்ற 8ம் வகுப்பு மாணவன் ஓடையில் மூழ்கி பலியானான்.
தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சாகீர் உசேன். இவரது மகன் சம்சுதீன். டபிள்யூஜிசி ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று நண்பர்கள் 9 பேருடன் இவன் தருவைகுளம் செல்லும் சாலையில் உள்ள காட்டாற்று ஓடைக்கு மீன் பிடிக்கச் சென்றான்.
அங்கு நண்பர்களுடன் குளித்த சம்சுதீன் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று மாயமானான். சம்சுதீனைக் காணாமல் பதறிய நண்பர்கள் அவனைத் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதனால் பயந்துபோன அவர்கள் இது குறித்து சம்சுதீனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடைக்கு வந்து தேடியும் சம்சுதீன் கிடைக்கவில்லை. தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் அங்கு வந்து சம்சுதீன் உடலை மீட்டனர். இது குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications