For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி: அதெப்படி கைதானவுடனேயே உடல்நலம் பாதிக்கிறது?-நீதிபதி கேள்வி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அது எப்படி ஏதாவது வழக்கில் கைதானாவுடனேயே உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும் புள்ளிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாக்கட்டும் ஏதாவது வழக்கில் சி்க்கி கைதானார்கள் என்றால் உடனே அவர்களுக்கு மாரடைப்போ, உயர் ரத்த அழுத்தமோ, நெஞ்சு வலியோ ஏதாவது ஒன்று வந்துவிடும். அது எப்படி கைதானவுடன் தான் அனைத்து வியாதிகளும் வருகிறது என்று மக்கள் இத்தனை நாட்களாக நினைத்தனர்.

அதை உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி வாய்விட்டே கேட்டுவிட்டார். 2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் பாலிவுட் தயாரிப்பாளரான கரீம் மொரானியின் ஜாமீன் மனு நீதிபதி வி.கே.ஷாலி முன் விசாரணைக்கு வந்தது. மொரானிக்கு உடல் நிலை சரியில்லை. அவர் ஒரு இருதய நோயாளி என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் வாதாடினார்.

அவர் வாதத்தைக் கேட்ட நீதிபதி அது எப்படி தைதானவுடன் தான் உடல் நலம் பாதிக்கிறது என்று கேட்டார். பின்னர் மொரானியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

English summary
The Delhi High Court has raised the pertinent question that is in the minds of the public regarding an accused falling sick as soon as he/she was arrested. Speaking on the sidelines of the bail plea of 2G accused and Bollywood producer Karim Morani, Justice V K Shali sought to understand the curious case and commented, "Why everybody falls sick once he is taken into custody"?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X