2ஜி ஊழல் வழக்கு விசாரணை: முதல் சாட்சியாக ஆனந்த் சுப்ரமணியத்திடம் விசாரணை

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிபதி ஓ.பி.ஷைனி வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. மேலும் இதில் தொடர்புடைய யாருக்குமே ஜாமீன் கொடுக்கப்படவில்லை. மேலும் இன்று முதல் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி ஷைனி அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை விசாரணை தொடங்கியது.
மொத்தம் 150 பேர் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் 28 பேரிடம் இந்த மாதம் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த 28 பேரில் 11 பேர் ரிலையன்ஸ் அதிகாரிகள், மற்றவர்கள் ஸ்வான் டெலிகாம், டிபி ரியாலிட்டி அதிகாரிகள். இதில் இன்றுகாலை முதல் சாட்சியாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் ஆனந்த் சுப்பிரமணியம் விசாரிக்கப்பட்டார்.
ஸ்வான் டெலிகாமை முன் நிறுத்தி அதன் பெயரில் தனக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற ரிலையன்ஸ் முயன்றது என்பது சிபிஐயின் முக்கிய குற்றச்சாட்டாகும்.
கோர்ட்டில் ராசா, கனிமொழி
சாட்சிகள் விசாரணை தொடங்கியதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். அவர்களும் விசாரணையைக் கவனித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேர் விவரம்:
முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா
முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா
ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா
ரிலையன்ஸ்-அடாக் நிறுவன நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி
ரிலையன்ஸ்-அடாக் முதுநிலை துணைத் தலைவர் சுரேந்திர பிபாரா
ரிலையன்ஸ்-அடாக் முதுநிலை துணைத் தலைவர் ஹரி நாயர்
யூனிடெக் வயர்லெஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா
டிபி ரியாலிட்டி, ஸ்வான் டெலிகாம் புரோமோட்டர் ஷாஹித் பல்வா
டிபி லியாலிட்டி, ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா
கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டி
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி
குஸேகோவன் ப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் இயக்குநர் ராஜீவ் அகர்வால்
குஸேகோவன் ப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ், இயக்குநர் ஆசிப் பல்வா
சினியுக் பிலிம்ஸ் புரமோட்டர் கரீம் மொரானி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
யுனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிட்டெட் (தமிழ்நாடு)
ஸ்வான் டெலிகாம்
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 14 பேர் தனி நபர்கள், 3 நிறுவனங்கள் ஆகும். 14 பேர் மீதும் நம்பி்கைக துரோகம் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications