ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக பேரூராட்சி தலைவிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியை வெடிகுண்டுவீசி கொலை செய்து விடுவதாக மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியாக அதிமுகவைச் சேர்ந்த சிராஜ்நிஷா என்பவர் வெற்றி பெற்றார்.
கடந்த பல ஆண்டுகாளக திமுக வசம் இருந்த இந்த பேரூராட்சியை இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றியுள்ளது.
இதனால் அத்திரமடைந்த திமுக கவுன்சிலர் பழனிவேல் மகன் அழகேசன் என்பவர் தனது செல்போன் மூலம் பேரூராட்சி தலைவி சிராஜ்நிஷாவின் கணவர் அஜ்மல்கானை தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டி வெடிகுண்டுவீசி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அதிமுக பேரூராட்சி தலைவி சிராஜ்நிஷா மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ராமநாதபுரம் எஸ்.பி.யை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.
இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications