குண்டர் சட்டத்தில் 'பொட்டு' சுரேஷ் கைது செய்யப்பட்டது செல்லாது-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குண்டர் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து பொட்டு சுரேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்த தீர்ப்பில், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் பொட்டு சுரேஷ். ஆனால் நில அபகரிப்பு விவகாரத்திற்காக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியது செல்லாது. எனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷை விடுவிக்க உத்தரவிடுகிறோம் என்று கூறினர்.
இதன் மூலம் சுரேஷ் மீதான குண்டர் சட்டம் விலகியுள்ளது. இருப்பினும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரால் விடுதலையாகி வெளியே வர முடியாத நிலை உள்ளது.
கடந்த 6 மாத காலத்தில் பல்வேறு திமுக பிரமுகர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்களில் முதல் ஆளாக வெளியே வந்துள்ளார் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக பொட்டு சுரேஷ், மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி உள்ளிட்ட மூன்று பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நில அபகரிப்பு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. இதில் மதுரை அருகே திருமங்கலத்தில் தம்பதியரை மிரட்டி அவர்களுக்குச் சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாகும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications