அமர்த்தியா சென் சாதனையை சமன் செய்த கொல்கத்தா மாணவி!

கொல்கத்தாவை சேர்ந்தவர் மஹிமா கன்னா (வயது 23). பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதை முடித்த உடன், எம்.பில். ஆய்வு படிப்பை பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். 2010-11-ம் கல்வி ஆண்டு எம்.பில். (பொருளியல்) ஆய்வு படிப்பு மாணவ- மாணவிகளில் உயர் ரேங்கில் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து, இப்பல்கலைக்கழகத்தின் கெளரவ பரிசான ஸ்டீவன்சன் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை வாங்கும் மூன்றாவது இந்தியர் மஹிமா கன்னா.
நோபல் பரிசு பெற்றவரும் இந்திய பொருளாதார மேதையான அமர்தியா சென் 1956-ல் இவ்விருதை பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர். அடுத்து 1967-ல் தாஸ்குப்தா என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருக்கு இந்த விருது கிடைத்தது. இப்போது மஹிமா கன்னா இந்த விருது வென்றுள்ளார்.
இந்த 3 பேரில் அமர்தியா சென்னும், மஹிமா கன்னாவும், பொருளாதார பாடத்தில் ஒரே பிரிவை எடுத்து ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமர்தியா சென்னின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
மஹிமா தற்போது மும்பையில் வர்த்தக கணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தியாவிலேயே தொடர்ந்து பணிபுரிவேன் வேலைக்காக வெளி நாடு செல்ல மாட்டேன் என்று அவர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications