'சாலை விபத்து விசாரணை வழிமுறை' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, உலக வங்கி திட்டத்தின் கீழான தமிழ்நாடு நகர வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் சாலை விபத்து விசாரணை வழிமுறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த வழிமுறையானது, துல்லியமான பூகோள நிலைப்பாடு விவரங்கள் (ஜி.பி.எஸ். டேட்டா) அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்க கருவியின் உதவியுடன் செயல்படுகிறது. இதன்மூலம், அவசர காலப் பணிகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவமனைகளுடன் விரைந்த ஒத்துழைப்புடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை அளிக்க உதவும்.
பதிவு செய்யப்பட்ட விபத்து விவரங்களை உபயோகித்து பூகோள தகவல் முறை உருவாக்கி அதன் மூலம் விபத்து விவரங்களை நகரத்தின் எண் வரைபடத்தில் (டிஜிட்டல் மேப்) குறிக்கப்பட்டு இந்த விவரங்களை ஆய்வு செய்து போக்குவரத்தினை திட்டமிடவும், நிர்வகிக்கவும் உபயோகிக்கப்படும்.
சாலை விபத்துக்களின் விசாரணைக்கும், நீதிமன்றங்களின் வாயிலான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். விபத்திற்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முழுமையாக இணைத்து செயல்படுவதுடன் மாநில போக்குவரத்து திட்ட பிரிவுக்கும் உதவிகரமான தொடர்பினை கொண்டு இருக்கும்.
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கென வேகக் கதிர் துப்பாக்கிகள் மற்றும் சுவாச ஆய்வுக் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்ட காவல் இடைமறிப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அதிகமான சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய அதிவேகம், குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களைக் கண்டு பிடித்தல் மற்றும் தடுத்தல் மூலம் சாலை விபத்துக்களை தவிர்த்திடவும் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும் பயன்படும்.
மேற்கண்ட சாலை விபத்து விசாரணை வழிமுறை மற்றும் காவல் இடைமறிப்பு வாகனங்கள் ஆகிய இரண்டு திட்டங்களும் தனியார் நிறுவனத்தின் மூலம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சாலை விபத்து விசாரணை வழிமுறையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். துல்லியமான பூகோள நிலைப்பாடு விபரங்கள் அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்ககருவிகளையும், புதிய இடைமறிப்பு வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறையினருக்கு அவர் வழங்கினார். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் வாகனங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி சாலை விபத்துக்களை தடுத்து பொது மக்களுக்கு சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டி.ஜி.பி. ராமானுஜம், போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications