2010-2011ம் ஆண்டில் ரூ.149 கோடி நிகர லாபம் ஈட்டிய டிஎன்பிஎல் நிறுவனம்
கரூர்: தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் ஈவுத் தொகை ரூ.12 கோடியே 22 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 2010-2011ம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.149 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கரூர் அருகே உள்ள காகிதபுரத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய காகித தொழிற்சாலையான தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார்.
அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான இது லாபத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 2010-2011ம் ஆண்டுக்கான ஈவுத் தொகையில் அரசின் பங்கான ரூ.12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 2010-2011ம் ஆண்டில் வரி செலுத்திய பிறகு ரூ.149 கோடி ரூபாய் நிகரலாபம் அடைந்துள்ளது.
இதன் பயனாக தமிழக அரசுக்கு 50 பங்கு ஈவுத் தொகையாக ரூ. 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500க்கான வரைவுக் காசோலை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது.
அப்போது தமிழக தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications