விபச்சாரம் நடந்த வீட்டுக்கு பூட்டு: போலீஸ் கண்காணிப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். ஆறு மதங்களுக்கு அந்த வீட்டை கண்காணிக்குமாறு எடப்பாடி வட்டாட்சியருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகில் உள்ள ரங்கம்பாளையம் என்ற ஊரில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் குப்பன் மனைவி மாதம்மாள் என்பவர் தனது வீட்டில் இளம் பெண்களை கொண்டு வந்து வைத்துக்கொண்டு விபச்சாரம் நடத்துவதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்த வழக்கை பதிவு செய்த சேலம் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாதம்மாள் வீட்டில் சோதனை நடத்தி அங்கு விபசாரம் செய்து கொண்டிருந்த சித்தரா, மஞ்சுளா என்ற இரண்டு அழகிகளை கைது செய்தனர். இதற்கு தரகராக செயல்பட்ட பூபதி, வீட்டின் உரிமையாளர் மாதம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வீட்டுக்கு சீல் வைப்பு
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விபச்சாரத் தொழில் நடத்திய மாதம்மாளின் வீட்டை பூட்டி சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் போலீசார் அனுமதி கோரினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் மாதம்மாளின் வீட்டை சங்ககிரி கோட்டாட்சியர் சிவராஜ் பூட்டு போட்டு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, எடப்பாடி போலீசார் இந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர், ஆறு மதங்களுக்கு தொடர்ந்து அந்த வீட்டை கண்காணிக்கும் படி, எடப்பாடி வட்டாச்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வீடு தரைமட்டம்
இதே போல சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், ரெட்டி மணியக்காரனூர் ஆகிய ஊர்களில் விபச்சாரத்திற்கு பயன்பட்ட பல வீடுகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கே.ஆர்.தோப்பூர் என்ற ஊரில் சீல் வைத்த வீட்டை திறந்து விபச்சாரம் நடத்திய இருக்கும் குப்புசாமி என்பவரின் வீட்டினை போலீசார் இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications