டக்ளஸ் தேவானந்தா வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மறுப்பு
சென்னை: சென்னையில் நடந்த சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ராஜபக்சே ஜால்ரா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் மறுத்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்ச்சுக்கு மாற்றப்படுகிறது.
சென்னையில் டக்ளஸ் தேவானந்தா ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தபோது ஒரு சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வழக்கில் சிக்கினார். பின்னர் அவர் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இதுவரை டக்ளஸ் ஆஜராகவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் டக்ளஸை கைது செய்ய உத்தரவிடக் கோரி வக்கீல் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தான் ஏற்கனவே டக்ளஸின் வக்கீலாக செய்லபட்டதால் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி சுதந்திரம் அறிவித்தார். மேலும் வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரைத்தார்.
இதையடுத்து இந்த வழக்கு வேறு ஒரு பெஞ்சுக்கு மாற்றப்படும். அதன் பின்னர் விசாரணை நடைபெறும்.












Click it and Unblock the Notifications