ஊழலுக்கு எதிராக லோக்சபாவில் ஒரு வார்த்தையும் பேசாத சோனியா-ஒருமுறை பேசிய ராகுல்!

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
டெல்லி: லோக்சபாவில் நடந்த விவாதங்களின்போது ஊழலுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆனால் சோனியா காந்தி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ சட்டம் மூலம், கேட்கப்பட்ட கேள்விக்கு லோக்சபா செயலகம் இதுதொடர்பாக அளித்துள்ள பதிலில் இது தெரிய வந்துள்ளது. லோக்சபாவில் நடந்த விவாதங்களின்போது சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் எத்தனை முறை பேசியுள்ளனர் என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு லோக்சபா செயலகம் தெரிவித்துள்ள தகவல்:

ஊழல், கருப்புப் பண விவகாரம், நீதித்துறையை வலுவாக்குவது, காலியாகவுள்ள நீதித்துறை பதவிகளை நிரப்புவது, ஆர்டிஐ சட்டத்தை மேலும் வலுவாக்குவது ஆகியவை குறித்த விவாதங்களில் ராகுல் காந்தி பங்கெடுத்துள்ளார். ஆனால் சோனியா காந்தி அதில் கலந்து கொண்டதில்லை.

இதுகுறித்து 2011, ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். கேள்வி கேட்டுள்ளார்.ஊழலை ஒழிக்கவும், விசாரணை அமைப்புகளைப் பலப்படுத்தவும் வலிமையான சட்டம் தேவை, அமைப்பு தேவை என்று ராகுல் காந்தி அப்போது பேசினார்.

இருப்பினும் சோனியா காந்தி இதுவரை எந்தப் பிரச்சினை குறித்தும் பேசியதில்லை.

இன்னொரு கேள்விக்கு லோக்சபா செயலகம் அளித்துள்ள பதிலில், சோனியா காந்தி இதுவரை மத்திய அரசின் சார்பில் எந்தவொரு சர்வதேச நிகழ்ச்சியிலும் பங்கேற்றதில்லை. மேலும் 2009 முதல் 2011 வரை இந்திய நாடாளுமன்ற குழுக்கள் வெளிநாடுகளுக்குப் போனபோது அவற்றிலும் அவர் பங்கேற்றதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபையின் உரிமையை மீறும் வகையில், சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ நடந்து கொள்ளவில்லை என்றும் இன்னொரு கேள்விக்கு லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 15 கேள்விகளை ஆர்டிஐ மூலமாக டெல்லியைச் சேர்ந்த கோபால் பிரசாத் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+